அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைக் கொண்டாடும் விதமாக வால்பாறையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கோவை: வால்பாறையில் அதிமுகவினர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை வரவேற்று கோவை மாவட்டம் வால்பாறை நகர் கழக சார்பில் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி ஆணைக்கிணங்கவும், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே அமுல் கந்தசாமி அறிவுறுத்தலின் படியும், வால்பாறை நகரக் கழக செயலாளர் மயில் கணேசன் ஆலோசனைப்படி, வால்பாறை நகராட்சி முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.