கோவை மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர் - விரைந்து முடிக்க உத்தரவு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளைத் தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரும்படி உத்தரவு.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63-க்குட்பட்ட ராமநாதபுரம்‌, 80 அடி சாலையில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ் (2022-2023) ரூ.26 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 140 மீட்டா்‌ தொலைவிற்குச் சாலைப் பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63-க்குட்பட்ட ராமநாதபுரம்‌, 80 அடி சாலையில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்‌.66-க்குட்பட்ட பெரியார்‌ நகர்ப்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகாப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌ (TURIP 2022-2023) கீழ் ரூ.26 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.64-க்குட்பட்ட புலியகுளம்‌, ஜெகநாதன்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌(TURIP2022-2023) கீழ்‌ ரூ.7.69 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 200 மீட்டர் தொலைவிற்கு சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர்‌, அப்பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடச் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடா்ந்து, வார்டு எண்‌.66-க்குட்பட்ட பந்தயச் சாலை, Tea Estate சாலையில்‌ தமிழ்நாடு நிலையான நகாப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌ (TURIP 2022-2023) கீழ் ரூ.15.82 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 265 மீட்டா் தொலைவிற்கு சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதையும்‌,



வார்டு எண்.66-க்குட்பட்ட எல்‌.எம்‌.எல்‌.காலனி முதல்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின்‌ (2022-2023) கீழ் ரூ.9.65 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 225 மீட்டர் தொலைவிற்கு சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.26-க்குட்பட்ட பீளமேடு, பயனீமில்‌ சாலையில்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ புதிதாக அமைக்கப்பட்ட சத்துணவுக் கூடத்தை மாநகராட்சி ஆணையாளர் திறந்து வைத்துப் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில்‌ மரக்கன்று நட்டு வைத்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, பணிகள்‌ குழு தலைவர்‌ சாந்தி முருகன்‌, மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ மரியசெல்வம்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, உதவிப் பொறியாளர்‌ சக்திவேல்‌,பாலச்சந்தா, சுகாதார ஆய்வாளர்கள்‌ ஜெகநாதன்‌, ஸ்ரீரங்கராஜ்‌, தலைமையாசிரியர்‌ அருளானந்தன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...