வால்பாறை கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்குச் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதி மீறல் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் கற்பகம் மற்றும் கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் ஆகியோர் படங்கள் மூலம் விழிப்புணர்வு செய்தனர்.
கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்குப் போக்குவரத்து விதி மீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை கலைக் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்குச் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதி மீறல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் காவல் ஆய்வாளர் கற்பகம் மற்றும் கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் ஆகியோர் படங்கள் மூலம் விழிப்புணர்வு செய்தனர்.
இதில் சாலையை எவ்வாறு கடந்து செல்வது, வாகனத்தில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது, வளைவுகளில் வாகனங்களை முந்தி செல்லும் போது, ஏற்படும் விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது, போன்றவை குறித்து எடுத்துரைத்தனர்.