கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு- இரவிலும் தொடரும் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும், உரிய காரணம் இன்றி மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை:மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து கோவை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஷேக் முகமது என்ற மாணவர் அவரது மனைவியான ஹாரிதா (இருவரும் கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் டிசி தொடர்பாக கல்லூரி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

அதே சமயம் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரையும் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய விளக்கம் அளிக்காமல் மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகம் முன்பு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் இரவு நேரத்திலும் தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உரிய காரணங்கள் இன்றி இடைநீக்கம் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தை காரணம் காட்டி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும் விசாரணைக் குழுவில் மாணவர்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...