கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி - வனத்துறை விசாரணை!

கோவை கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது குறித்து வனத்துறை விவசாரணை நடத்திவருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் புள்ளிமான்கள் அதிகம் உள்ளது.



இந்த நிலையில் நேற்றிரவு சாலையில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில், அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இன்று காலை வழக்கம்போல் அவ்வழியாக சென்ற மக்கள், இறந்து கிடந்த புள்ளி மானைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புள்ளிமான் இறப்பு குறித்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புள்ளிமான் உண்மையிலேயே வாகனம் ஏதும் மோதி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்கிற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...