சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளம்பெண்ணுக்கு, கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்கள் சரண், சதிஷ் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.
வால்பாறையில் உள்ள 62 எஸ்டேட்டுகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெற்று செல்கின்றனர்.
இம்மருத்துவமனையில் நீண்ட நாளாக அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட 18 வயது பெண்ணிற்கு வால்பாறையில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
எலும்பு முறிவு மருத்துவர் சரண், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.