வால்பாறையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சுள்ளிக் கொம்பன் என்னும் ஒற்றைக் காட்டுயானை, குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம். யானையை வனத்திற்குள் விரட்டியடிக்கும்படி மக்கள் கோரிக்கை.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வந்த ஒற்றைக் காட்டு யானை சுள்ளிக் கொம்பன் தொடர்ந்து சில நாட்களாகவே காலை மற்றும் மாலை நேரங்களில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உலா வந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஆழியார் அணையின் கரையோரம் பகுதிகளில் உலா வந்து யானை சாலை வழியாக ஆழியாரில் இருந்து வால்பாறை சாலை 1வது கொண்டை ஊசி வளைவுவரை வந்து செல்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
மேலும், நவமலை மின்சார வாரிய ஊழியர்கள் இருக்கும் பகுதிக்கும் அடிக்கடி சென்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனையடுத்து, இப்பகுதி பொதுமக்கள் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாகவும் பாதுகாப்புடனும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.