கோவை குறிச்சி அருகே குழந்தைகளை துரத்தும் தெருநாய்கள் - உடனடியாக பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

கோவை குறிச்சி அருகே தெரு நாய்கள் துரத்துவதால் பள்ளி மாணவ - மாணவிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளை துரத்தும் தெரு நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுந்தராபுரம் அடுத்த குறிச்சியில் வெங்கடாஜலபதி நகர், திருமறை நகர் மற்றும் போத்தனூர் ரோடு போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்து வருகிறது.

இந்த நாய்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வீட்டை விட்டு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை துரத்துவதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் தலை தெறிக்க ஓடி பயத்தில் கீழே விழுந்து எழும் நிலை உள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி வருகிறது.

இதனிடையே நேற்று மாலை திருமறை நகரில் கணேசன் என்பவரின் 3 வயது குழந்தை வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், குழந்தையை சூழ்ந்து கொண்டு கடிக்க முற்பட்டது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஆங்காங்கே இருக்கும் பெரியவர்கள் உடனே வந்து தெரு நாய்களை துரத்தி விட்டு குழந்தையை காப்பாற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, தெரு நாய்கள் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை.

இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக ஊளையிட்டு வருகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை வெளியே நடை பயிற்சிக்கு அழைத்துக் கொண்டு செல்லும் போது கூட தெரு நாய்கள் கூட்டம் சுற்றி வளைத்துக் கொண்டு குறைத்து வருகிறது.

அந்த நாய்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அனேகமான நபர்களை நாய்கள் கடித்து இருக்கிறது. நாயிடம் கடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட அதற்கு பயந்து ஓடும் போது கீழே விழுந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பெரியவர்களே நாயை கண்டு பயந்து போய் ஓடும் சூழலை இருக்கும் போது சிறிய குழந்தைகள் என்ன செய்ய முடியும். எங்கள் பகுதி மட்டுமல்ல கோவையில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...