சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாளை வாக்களிக்க வேண்டும், முன்னாள் மேயர் ராஜ்குமார் பேட்டி


ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு வர முடியாத சூழல் இருப்பதை உணர்ந்து பெரும்பான்மை கோரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நாளை நடைபெறும் பெரும்பான்மை நிரூபிக்கும் தேர்தலில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அத்தொகுதியின் பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை கணபதி பகுதியில் பன்னீர்செல்வம் ஆதரவாளரும் முன்னாள் மாநகர மேயருமான கணபதி ராஜ்குமார் தலைமையில் கூடிய அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினரான பி.ஆர்.ஜி அருண்குமார் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வாக்களிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். 

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.அப்போது பேசிய கணபதி ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூவத்தூரில் இருப்பது மட்டுமே ஊடகங்கள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அவரது கவனத்திற்கு மக்களின் எண்ணங்களையும், கட்சி தொண்டர்களின் மன நிலையையும் எடுத்து கூறும் வகையில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வாக்களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வாக்குகள் கோரி மக்களை சந்திக்க வர முடியாத நிலை இருப்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறிய அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு  இல்லாதவர்களும் கட்சியை கைப்பற்ற துடிக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...