தனியார் பள்ளி மற்றும் காவல்துறை இணைந்து தாராபுரத்தில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து தனியார் பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே மடத்துக்குளம் - ஓட்டமடம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சார்பில் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தாராபுரம் காவல் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
மேலும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தாராபுரம் பூக்கடை வீதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியை தனியார் பள்ளியின் பயிற்சி உதவி ஆய்வாளர் தமிழ்ராஜ் கொடியை அசைத்து துவங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
இந்த பேரணியானது, வசந்தாரோடு, சி.எஸ்.ஐ வளாகம், நகராட்சி மேல்நிலைப்பள்ளி சாலை, வழியாக பொள்ளாச்சி அமராவதி ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இதனிடையே அமராவதி ரவுண்டானா பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகள் மற்றும் விதை பந்துகள் வழங்கினர்.
மேலும், அவர்களிடம் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.