பவாணியின் குறுக்கே கேரளா அணை கட்டும் பணியை நிறுத்த தமிழக அரசு நீதிமன்றத்தில் தடையாணை வாங்க வேண்டும் - தபெதிக கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு விரைவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற வேண்டும் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்கு வட்டை என்னும் பகுதியில் தடுப்பணையை கட்டி முடித்துள்ளது எனவும், மேலும் 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தும் தமிழக அரசு விரைந்து வழக்கு தொடுத்து முறையாக வழக்காடாத காரணத்தால் தடையாணை பெற முடியவில்லை என கூறிய அவர், மேற்கு மண்டலத்தை சார்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த பிரச்சனைக்கு முழு கவனம் செலுத்தி மீண்டும் புதிய வழக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வரும் 19 ஆம் தேதி கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவையிலிருந்து கேரளா செல்லும் வழித்தடங்களை அடைக்கும் வகையிலான போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...