திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையத்தில் 100 ஆண்டு பழமைவாய்ந்த பாதையை, தார்ச்சாலையாக மாற்றகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஓன்றியம் பள்ளபாளையத்தில் 100 ஆண்டு பழமையான இட்டேரி பாதையை தார்சாலையாக மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளபாளையம் நால்ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை ஒன்றிய பொருளாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ரத்னகுமார், இமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை ஒன்றியச் செயலாளர் தமிழ்த்தென்றல், கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, கருப்புச்சாமி, அஜித்குமார், சி.ஐ.டி..யூ செயலாளர் S.ஜெகதீசன், முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இட்டேரி பாதையை, தார்ச்சாலையாக மாற்றக்கோரி சுந்தரம் மாரிமுத்து துரைசாமி, செந்தில்குமார், பட்டீஸ்வரன், பெருமாள்சாமி, துரையரசன், ராமு, உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
கோரிக்கையை உடுமலை ஊராட்சிஒன்றிய நிர்வாகம் விரைவாக நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.