உடுமலை அருகே மைவாடி பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்தமடத்துக்குளம் அருகே மைவாடி பகுதியில் தனியார் தென்னைநார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, தேங்காய் மட்டைகளிலிருந்து, தேங்காய் நார் பிரித்தெடுக்கப்படுகிறது.

மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த மட்டைகள் மற்றும் தேங்காய் நார் பண்டல்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதைப்பார்த்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

தேங்காய் மட்டைகள் மற்றும் தேங்காய் நார்கள் காய்ந்த நிலையில் இருந்ததால், மளமளவென்று தீ பரவியது.
இதையடுத்து, உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்தத் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டை மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தால் ஏற்பட்ட கரும் புகையால் அப்பகுதி முழுவதும் கருமேகம் சூழ்ந்ததுபோல் காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.