கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை கருத்தரங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கோவயில் நடைபெற்று வரும் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 'ஐஆக்ட்ஸ்க்கான் 2023' (IACTSCON) கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கு "ஐஆக்ட்ஸ்க்கான் 2023" (IACTSCON) கோவையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர். அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்து கொண்டார்.



இந்திய மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைக்கவும், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கினார்.

'பெருந்தொற்றை நாம் கையாண்டதும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களும்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் மெஹர்வால் மற்றும் அதன் செயலர் டாக்டர் ஹிரேமத் தலைமை தாங்கினர்.

இந்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த கடந்த ஆறு மாதங்களாக உழைத்து வந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தியாகராஜமூர்த்தி தனது நன்றிகளை தெரிவித்தார். குறிப்பாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டாக்டர் முரளிதரன் மற்றும் பொருளாளர் டாக்டர் விஜய் ஆகியோரின் பங்களிப்பிற்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...