ஈஷா மஹாசிவராத்திரி விழா - பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும்‌ கோவை!

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பிரம்மாண்ட விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ஈஷாவின் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ள நிலையில் கோவையில் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றன.

இதுதொடர்பாக ஈஷா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பழங்குடி சமூகத்தில்‌ இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர்‌ திரெளபதி முர்மு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்‌.

குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர்‌ முதல்முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில்‌ நடைபெறும்‌ இவ்விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பு பிப்‌ரவரி 18-ம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ மறுநாள்‌ காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இவ்விழா தியானலிங்கத்தில்‌ நடைபெறும்‌ பஞ்ச பூத க்ரியையுடன்‌ தொடங்கும்‌. இதை தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும்‌. பின்னர்‌, விழா மேடையில்‌ குடியரசு தலைவர்‌ மற்றும்‌ சத்குரு சிறப்புரை ஆற்ற உள்ளனர்‌.

அதன்‌ பிறகு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மேற்கு வங்கம்‌, ராஜஸ்தான்‌ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த பிரபல கலைஞர்களின்‌ இசை நிகழ்ச்சிகள்‌ விடிய விடிய நடைபெறும்‌. இதற்கிடையில்‌ நள்ளிரவு மற்றும்‌ அதிகாலை பிரம்ம முஹூர்த்த காலத்தில்‌ சத்குரு வழிநடத்தும்‌ சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும்‌, சத்சங்கமும்‌ நடைபெறும்‌.

குறிப்பாக, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப்‌ புற கலைஞர்‌ கிரு. வேல்முருகன்‌, ராஜஸ்தானி நாட்டுப்‌ புற கலைஞர்‌ மாமே கான்‌, இசையமைப்பாளரும்‌, பிரபல சித்தார்‌ இசை கலைஞருமான நிலத்ரி குமார்‌, டோலிவுட்‌ பின்னணி பாடகர்‌ ராம்‌ மிரியாலா உள்ளிட்டோர்‌ பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்து கொள்ள உள்ளனர்‌.

விழாவிற்கும்‌ வருகை தரும்‌ லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இரவு முழுவதும்‌ மஹா அன்னதானம்‌ வழங்கப்படும்‌. கடந்தாண்டு ஆஸ்கர்‌ மற்றும்‌ கிராமி விருது விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு தமிழ்‌, இந்தி, தெலுங்கு, கன்னடம்‌, மராத்தி, சைனீஸ்‌, போர்ச்சுகீஸ்‌, ஸ்பானீஸ்‌, பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதுதவிர, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர்‌, நாகர்கோவில்‌ உட்பட தமிழ்நாட்டில்‌ 32 இடங்களில்‌ நடைபெறும்‌ ஈஷா மஹா சிவராத்திரி கொண்டாட்டங்களில்‌ பொதுமக்கள்‌ இலவசமாக நேரில்‌ பங்கேற்கலாம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...