கோவை நீதிமன்றம் அருகில் கோகுல் என்பவர் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை, கைது செய்த நீலகிரி காவல் ஆய்வாளர்கள் மணிக்குமார், வேல்முருகன், சரவணகுமார் தலைமையிலான போலீசாரை கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கோவை: கோவையில் கோகுல் என்பவரைக் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை, நீலகிரியில் கைது செய்த போலீசாருக்கு கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல்(22). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராவதற்காக தனது நண்பர் மனோஜ் என்பவருடன் வந்தார். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது, கோர்ட்டின் பின்புறம் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல், கோகுலை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.
இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன் சிக்னல் ஊட்டி சுற்றுப்புற பகுதியில் காட்டியதால் நீலகிரி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதனால் அவர்களைப் பிடிக்க நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து தப்பிக்க முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை, கோத்தகிரி பகுதியில் வைத்து நீலகிரி போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர் கோவை போலீசார் அவர்களை கோவைக்கு அழைத்துச் சென்றனர். 7 பேரை மடக்கிப் பிடித்த நீலகிரி இன்ஸ்பெக்டர்கள் மணிக்குமார், வேல்முருகன், கவிதா, சரவணகுமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், விஸ்வநாதன், வின்சென்ட், முகைதீன், காவலர்கள் பிரபு, பிரேம் ஆகியோரை பாராட்டி கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.