கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம் - ஊட்டி காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் சரண்!

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகே கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைதான நிலையில், கோவை காந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் ஊட்டி பி-1 காவல் நிலையத்தில் சரணடைந்தார்.



கோவை: கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில், வழக்கு விசாரணைக்காக கோவைநீதிமன்றத்திற்கு வந்தனர்.



அவர்கள் இருவரும் நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரம் 2 ஆவது வீதியில் தேனீர் அருந்த சென்றபோது பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக இருவரையும் கத்தியால் சரமாறி வெட்டிவிட்டு தப்பி சென்றது.

அதில், கழுத்தில் பலத்த வெட்டுக்காயத்துடன் இருந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கபட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

அப்போது, அந்தக் கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் தீவர வாகன சோதனை மேற்கொள்ளபட்டது. அதில், கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் நோக்கி 3 இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை வழிமறித்தபோது நிறுத்தாமல் சென்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தபோது, கோவை கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி என்பது தெரியவந்தது. மேலும் 2- பேர் கட்டபெட்டு பகுதியில் ஒரு பைக்கில் சென்றபோது பிடிபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, 4 பைக்குகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இவர்கள் அனைவரும் கோவைக்கு அழைத்துசெல்லப்பட்டபோது, 2 பேர் மேட்டுப்பாளையம் அருகே தப்பி ஓட முயன்றபோது, அவர்களின் கால்களில் சுட்டு போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்து. இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 8-வது நபர் கோவை காந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், உதகை B1 காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அந்த நபரைகாவல்துறையினர் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...