தற்போதைய தமிழக முதலமைச்சர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக முதலமைச்சர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் அவர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் ஷ்வச் மாரத்தான் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 1500 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஹோப்காலேஜ், சிட்ரா உல்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அங்கு வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், கவர்னர் பொறுமையாக ஆழமாக யோசித்து முடிவை அறிவித்திருக்கிறாரெனவும், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதா என நாளைக்குதான் தெரியும் என கூறினார்.

இன்று எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் நாளைக்கு அவர் பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது என கூறிய அவர், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை இரண்டு கழகங்களும் ஆண்டு அழித்து விட்டது எனவும், கழக அரசுகளால் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது எனவும் கூறினார்.

இங்கு அதிகார போட்டி நடைபெற்றுவருவதாக கூறிய பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முடிந்து விட்டன எனவும், நேர்மையான வளர்ச்சி தரக்கூடிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற புதிய தேடல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாகி உள்ளது எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...