வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் மறைந்து இருந்து தாக்கிய கரடி - மேற்பார்வையாளர் படுகாயம்!

கோவை வால்பாறையில் தேயிலைத் தோட்டத்திற்கு பதுங்கியிருந்த கரடி திடீரென தாக்கியதில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் புஷ்பராஜன் படுகாயம். வால்பாறை நகர்மன்றதலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் நேரில் நலம் விசாரித்து நிதியுதவி.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னி மேடு தேயிலை தோட்டம். இங்குள்ள இரண்டாவது டிவிஷனில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளராக பணி புரிபவர் புஷ்பராஜன் (வயது 53). நேற்று வழக்கம்போல் அவர் தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது தேயிலைச் செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென அவரது காலை கடித்தது. கரடியை பார்த்தவுடன் புஷ்பராஜன் பயங்கரமாக சத்தம் போட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்களும் சத்தமிட்டபடியே ஓடி வந்ததால், அச்சமடைந்த கரடி அவரை விட்டுவிட்டு தப்பி ஓடியது.



கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உருளிகல் எஸ்டேட்டில் உள்ள மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தகவல் அறிந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மருத்துவமனைக்கு சென்று, படுகாயமடைந்த புஷ்பராஜனை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதி உதவியும் வழங்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து தாக்கிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...