உடுமலையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறந்து செயல்படத் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: உடுமலையில் கட்டி முடிக்கப்பட்ட நூலகம் மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் ரூ.8.50 லட்சம் செலவில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகம் கட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த நூலகத்தைச் சுற்றிலும் ராமசாமி நகர், தில்லை நகர், ருத்ரப்ப நகர், கங்காதரன் லே-அவுட் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதி உள்ளவர்கள் டவுனில் உள்ள நூலகங்களையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
ஆகையால் இந்த நூலகத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.