நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அலுவலகம் முன்பு சி ஐ டி யு உடுமலை நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில், 2014 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்கு சட்டத்தின் முறையை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், உடுமலை நகர பகுதியில் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி மூலம் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள், தலை சுமையாக ஈடுபடும் தொழிலாளர்களை முறையாக கணக்கெடுக்க செய்ய வேண்டும். நடைபாதை வியாபாரிகள் அனைவருக்கும் தள்ளுவண்டி வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை குழு கூட்டத்தை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.