கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் 200பேர் போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று கையெழுத்திட்டனர்.
கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பாக இன்று போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் தோழர் சிவசங்கரன் தலைமையில் நடந்த இந்த இயக்கத்தில் துடியலூர் துணை ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் கையெழுத்திட்டுத் தொடங்கிவைத்தார்.

ஒன்றிய செயலாளர் தோழர் ராஜா வரவேற்புரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் அர்ஜுன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் மைதிலி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜோஷ்வா உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று கையெழுத்திட்டனர்.