கோவையில் அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தங்களது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளனர்.
கோவை: கோவையில் கார் ஓட்டுநர் சத்தியபாண்டி என்பவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இந்நிலையில் இன்று காலை கோவை நீதிமன்ற அருகே 4 பேர் கொண்ட கும்பல், இரண்டு பேரை அரிவாளால் வெட்டியதில் கோகுல் என்பவர் உயிரிழந்தார்.
கோவையில் அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தங்களது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில்,
கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை. அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை. திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை.
சென்னையில் நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களை பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ? என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் மேலே குறிப்பிடபட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி. மேலும், இந்த விடியா அரசின் முதல்வர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுக்காப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில்,
கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது.
ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு.
உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர், அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.