கோவையில் வடமாநில தொழிலாளி கொலை - மது குடிக்கச் சென்றபோது விபரீதம்!

கோவை விளாங்குறிச்சியில் மதுகுடிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பில்ட்ராம் என்பவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக ஜெயின் அனேனா அப்பார்ட்மெண்டில் தங்கி கட்டிட வேலை செய்துவரும் பீகார் மாலைத்தைச் சேர்ந்த பில்ட்ராம் (வயது35 ). பில்ட்ராம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் காலை 7 மணி அளவில் மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருந்த ஒருவர் பில்ட்ராம் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஒருவர் பிடுங்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரை பில்ட்ராம் தடுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் கையால் தாக்கியதில் பில்ட்ராம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இடது பின்தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பில்ட்ராமை மது போதையில் கீழே தள்ளிவிட்டவர் யார் என்றுசரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...