தஞ்சாவூரிலிருந்து நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கோசாலைக்கு வைக்கோல் ஏற்றி வந்த லாரி புதூர் 100 அடி சாலை அருகே வந்தபோது, சாலையின் மேலே சென்ற மின் கம்பி உராய்ந்ததில் வைக்கோலில் தீப்பிடித்தது.
கோவை: கோவைப்புதூர் அருகே சாலையில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிராங்கிளின். இவர் தஞ்சாவூரிலிருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, கோவை நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கோசாலைக்கு வந்துள்ளார்.
லாரி கோவைப்புதூர் 100 அடி சாலை அருகே வந்தபோது, சாலையின் மேலே சென்ற மின் கம்பி உராய்ந்ததில் வைக்கோலில் தீப்பிடித்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து வைக்கோல் கட்டுகளில் தீ பரவியதால் சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அதே பகுதியில் தீயணைப்பு நிலையமும் அமைந்துள்ளதால் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பிடித்த ஒரு சில வைக்கோல் கட்டுகளை அகற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.