கோவை சங்கனூரில் செல்போன் பேசியதை கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக, பாதிக்கப்பட்ட கணவர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவை சங்கனூர், தெனாலிராமன் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் வேடியப்பன். இவரது மனைவி சந்தியா.
இருவரும் காதலித்து பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன நிலையில், 27 வயதான சந்தியா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல் செல்போனில் பேசிகொண்டிருந்த சந்தியாவை வேடியப்பன் கண்டித்து சண்டை போட்டுள்ளார். இதில் கோபமடைந்த சந்தியா வீட்டை விட்டு சென்றுவிட்டததாக தெரிகிறது.
இதையடுத்து, வேடியப்பன் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன சந்தியாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.