கோயம்புத்தூர் மாநகராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் சொத்துவரி நிலுவை ரூ.12 கோடியும், நடப்பு வரி ரூ.48 கோடி என ஆக மொத்தம் ரூ.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
கோவை: தமிழகத்திலேயே சொத்துவரி வசூலில் முதல் இடத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சி பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் (12.01.2023 முதல் 08.02.2023வரை) கோவை மாநகர மக்கள் மாநகராட்சிக்கு வழங்கிய முழு ஒத்துழைப்பின் காரணமாக, சொத்துவரி நிலுவை கேட்பில் ரூ.12 கோடியும், நடப்பு கேட்பில் ரூ.48 கோடியும் ஆக மொத்தம் ரூ.60 கோடி வசூலிக்கபபட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திலேயே சொத்துவரி வசூலில் முதல் இடத்தினை கோயம்புத்தூார் மாநகராட்சி பெற்றுள்ளது.
எனவே மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ள வரியினங்களை இந்த 20ஆம் தேதிக்குள் முழுமையாக செலுத்தி தொடர்ந்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகர மக்களை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மார்ச் 31ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநார கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக பொதுமக்கள் வசதி கருதி மாநகராட்சியின் கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில் 11.02.2023 மற்றும் 12.02.2023ம் தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-5 விசுவாசபுரம் பகுதி, வார்டு எண் 55இல் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி பள்ளியிலும், வார்டு எண் 56ல் சுங்கம் மைதானம் - ஒண்டிபபுத்துரா பகுதியிலும், வார்டு எண்கள். 57,58 நெசவாளா் காலனி - ஒண்டிப்புத்துர், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.34 கவுண்டம்பாளையம், மஞ்சீஸ்வரி காலனி, விநாயகர் கோவில் வளாகம், வார்டு எண்.35ல் இடையா பாளையம் அண்ணா நகா் ஹவுசிங் யூனிட், வார்டு எண்.39 கவுண்டம்பாளையம், சீனிவாசபெருமாள் கோவில் வளாகம், வார்டு எண்.40 வீரகேரளம், சித்தி விநாயகா காலனி, விநாயகா கோவில், தின்மையா நகரிலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 88ல் குனியமுத்தூர் -மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி - வார்டு 94ல் மாச்சம்பாளையம் - விநாயகா கோவில் திடல் பகுதியிலும், வடக்கு மண்டலம் வார்டு 11ல் ஜனதா நகா், மாநகராட்சி துவக்கப் பள்ளி, வார்டு எண்.15ல் சுபரமணியம்பாளையம்- வார்டு அலுவலகம், வார்டு 19ல் மணியகாரன் பாளையம் - அம்மா உணவகம், வார்டு 25ல் அரசு மேல் நிலைப்பள்ளி - காந்திமாநகா் மற்றும் வார்டு 28ல் ஷோபா நகா் - வார்டு அலுவலகத்திலும்.
வார்டு எண்.29ல் லையன்ஸ் கிளப் மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா, சங்கனூர் நாராயணசாமி வீதியிலும், வார்டு 62 சாரமேடூ மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், வார்டு- எண்.63ல் பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகத்திலும், வார்டு 80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், மற்றும் வார்டு 84ல் ஜி.எம். நகரில் உள்ள தாகத் இஸ்லாம் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு, மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 31.03.2023 வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல் காலை 9.00மணி முதல் மாலை 4.00வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் கட்டிடங்கள் பூட்டி சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.