உடுமலை அருகே உள்ள திரு மூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
திருப்பூர்: பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 45.38 அடியாக குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
உடுமலை நகரம் உட்பட பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நான்கு மண்டலங்களாகப் பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாகத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 45.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 825 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 1,128 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.