ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்- ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அதிரடி


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, சமூக விரோதிகள் சிலர் போராட்ட களத்திற்குள் புகுந்ததாக கூறிய போலீசார், ஆயிரகணக்கான இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். 

சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய தடியடியில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது. இதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் ஆய்வு நடத்திய ராஜேஸ்வரன் இன்று காலை கோவை வந்தார்.



கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்திய வ.உ.சி. மைதானம், காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும்ம் கொடீசியா மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக நீதிபதி ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பவ இடங்களுக்கு சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறேன். விசாரணையின் தொடக்கமாக கலவரம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் பொருட்களின் சேத நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தொடர்ந்து, 15 நாட்களுக்குள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க இருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட பொதுமக்கள் எந்த வித பயமும் இன்றி என்னிடம் புகார் அளிக்கலாம். பொதுமக்களிடம் புகார்களை கேட்டறிவதற்கு முன்னதாக செய்தித்தாள்களில் வாயிலாக முறையான அறிவிப்பு வெளியாகும். கோவையை தொடர்ந்து, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.



இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் துணை ஆணையர்  (சட்டம் & ஒழுங்கு ) லட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...