'தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக வின் சூழ்ச்சியே காரணம்' திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பேட்டி.


தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக வின் சூழ்ச்சியே காரணம் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்,

பொள்ளாச்சி காளியப்ப கவுண்டன் புதூரில் சுயமரியாதை சமதர்ம இயக்கத்தின் தலைவர் காசு.நாகராசன் ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர், இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சாதி மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மதவாத ஆதிக்க வன்முறைகளை தடுக்க வேண்டும், அரசும் காவல் துரையினரும் இதற்கு துணை போக கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தற்போதைய அரசியல் சூழ்நிலை பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக நேரடியாக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால், இது அவர்கள் செய்யும் சூழ்சி எனவும், முதல்வர் போட்டியில் இருக்கும் இருவர் மீதும் எங்களுக்கு நல்ல நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத வெறியர்கள் இங்கு காலூன்றுவதற்க்கு எதிரான கருத்தை நாங்கள் பதிவு செய்வோம் என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...