அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும் தென் கொரிய ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும், தென் கொரியாவில் செயல்பட்டு வரும் ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது வரும் 5 வருடங்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, பயிற்சிக்காக மாணவர்கள் பரிமாற்றம், சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களுக்காக திட்டங்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஆகும்.

ஜிஜு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பயோ டெக்னாலஜி பேராசிரியரும், தேசிய முதன்மை ஆலோசகருமான முனைவர் மின்தேசன் இந்திய மாணவியரின் பயோ டெக்னாலஜி துறையில் வளர்ச்சியை கண்டறிந்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளார். 

அவர் ஆலோசகராக இருந்த காலத்தில் கொரியாவில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு உதவியுள்ளார். 

அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் ஜினோமிக்ஸ், மெட்டாபோலோமிக்ஸ் மற்றும் மருத்துவ குணமுள்ள தாவரங்களின் பன்புகளைக் குறித்து குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகளை பெற இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பல்கலை கழகத்தின் பதிவாளராக உள்ள எஸ்.கவுசல்யா இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பயனடைந்தவர் ஆவார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று மாணவிகள் கல்வி உதவித் தொகையுடன் ஜின்செங் குறித்து ஆராய்ச்சி செய்ய தேர்வாகியுள்ளனர். 6 முதுகலை மாணவிகளும், 2 ஆராய்ச்சி மாணவிகளும் தங்களுடைய ஆராய்ச்சியினை கொரியாவில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள அவர்களுக்கு முழு உதவிகளும் வழங்கப்படும்.

விலங்கியியல் பயோ டெக்னாலஜி, நியூட்ரிஜீனோமிக்ஸ், ப்ளேன்ட் ஜீனோமிக்ஸ் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆசிரியர்களும், மாணவிகளும் இணைந்து பணியாற்றுவர்.

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளங்கலை படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கொரியாவில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...