மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரி மேல்முடுதுறை மக்கள் ஆட்சியரிடம் மனு


குடிநீர் இன்றி மிகுந்த சிரமப்படுவதாகவும், உடனடியாக மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரியும் மேல்முடுதுறை மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மேல்முடுதுறை பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் கடந்த 10 வருடத்திற்கும் மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு பஞ்சாயத்து துறையின் மூலம் நிலத்தடி நீர் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுமையாக தடைபட்ட காரணத்தாலும், மோட்டார் பழுதடைத்துள்ளதாலும் கடந்த 5 மாதங்களாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீருக்காக பக்கத்து ஊர்களான கவுண்டம்பாளையம், காரணூர், கனுவக்கறை போன்ற ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வருகிறோம். 

இப்பிரச்சனை குறித்து முடுதுறை செயல்அலுவலர், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால்வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தும் பயனில்லை.

மேலும், எங்கள் ஊரிலேயே 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட ஆற்று நீர் தேக்கத்தொட்டியும் நீர் ஊற்று நிலையமும் அமைத்து பக்கத்து ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய நீர்தேக்கத் தொட்டி இருந்தும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதி மக்கள் பயனடையும் வகையில் குடிநீருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...