தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் ஊற்றி அழிக்க முயன்ற தபெதிக-வினர் கைது


கோவை அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் ஊற்றி அழிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்களில் இந்தி எழுத்துக்களில் ஊர் பெயர்கள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதன்படி கோவையை அடுத்த நிலம்பூர் பகுதியில் சேலம்- கொச்சின் புறவழிச்சாலை மைல்கல்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்தின் போது மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி வந்து, இந்தி எழுத்துக்களை அழிக்க முயற்சித்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் காவல் துறை தடுப்புகளை மீறி இந்தி எழுத்துக்கள் மீது தார் ஊற்ற முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, இழுத்துச்சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் இணை மொழியாக இருக்குமென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்ததற்கு மாறாக, மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மத்திய அரசின் நலத்திட்டங்களில் இந்தியை திணித்து வருவதாக கூறிய அவர்கள், மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...