தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் கோவையில் நாளை நடக்கிறது

குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் மெட்ரெகான் எனும் பெயரில் 17வது ஆண்டு தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் வரும் நாளை சனிக்கிழமை 4ம் தேதி தொடங்குகிறது. 

இதுகுறித்து மருத்து பதிவேட்டு துறையின் தலைவர் தெய்வசீலி கிருபாகரன் கூறியதாவது, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவிலான மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கி உள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வெளிநோயாளிகள் மற்றும் 60 ஆயிரம் உள்நோயாளிகள் பற்றிய தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2005ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கியதன் மூலம் அதிக அளவிலான காகிதங்களை சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டு சிறப்பான சேவை செய்ய இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி சர்வதேச நோய்களின் வகைப்பாடு 10 முறைப்படி மருத்துவ பதிவேடு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. மெமரி சிப் மூலம் நோயாளிகளின் முழு மருத்துவ தகவல்களும் பெயர் வரிசையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு, இந்தியாவில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...