ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் வரும் குறுஞ்செய்தி?


பொதுமக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது நியாய விலைக்கடை.

இதனால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பல பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளை தற்போது வரை மக்கள் உபயோகித்து வருகின்றனர்.

தற்போது, ரேஷன் கார்டுகளை மாற்றிஅதற்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் நியாயவிலை கடைகளும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் மையமாக்குவதன் முதல்படியாக ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்றது. இதன்மூலம், அதிக வருமானம் பெறுபவர்கள் மானிய விலையில் பொருட்கள் வாங்க முடியாது.

மேலும், பொதுமக்களின் கைபேசி எண் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டு, அவர்கள் மானிய விலையில் பொருட்கள் வாங்கும் போது, பொருட்களின் விலை மற்றும் அளவு ஆகியன குறித்த விவரங்கள் பொதுமக்களின் கைபேசிக்கு விரைவாக சென்றடையும்.

இந்த நிலையில், நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்காமலே பொதுமக்கள் கைபேசிக்கு பொருட்கள் வாங்கியதற்கான குறுஞ்செய்திகள் வருவதாக புகார் எழுந்துள்ளது.



இது குறித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த முகம்மது என்பவர் கூறுகையில், 'எனது குடும்ப அட்டையை பயன்படுத்தி நான் நியாய விலைக்கடையில்  பொருட்கள் வாங்கி வருகிறேன். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக பொருட்கள் எதுவும் வாங்காமலேயே பொருட்கள் வாங்கிய விபரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி எனக்கு வருகிறது.

எனது சகோதரர் மற்றும் அண்டை வீட்டாரின் கைபேசிக்கும் இதே போல், பொருட்கள் வாங்குவதற்கு முன்னதாகவே குறுஞ்செய்திகள் வருகின்றன. இது குறித்து சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடையில் கேள்வி எழுப்பினோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு சரியான பதில் தரவில்லை. குறுஞ்செய்தி தவறுதலாக வந்திருக்கலாம் எனவும், உங்களால் இயன்றதை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் பேசி மக்கள் மனதை புண்படுத்துகின்றனர். பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மானிய பொருட்களை சிலர் கையாடல் செய்கின்றனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வழங்கல் அதிகாரி இந்த பிரச்சனையில் தலையிட்டு ஒரு தீர்வை கொண்டுவர வேண்டும்' இவ்வாறு முகம்மது கூறினார்.

இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

பொருட்கள் வாங்காமல் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருவதாக  எங்களுக்கு எந்த புகார்களும் வரவில்லை.  ஒரே குடும்ப அட்டையில் இரு வேறு கைபேசி எண்கள் தவறுதலாக பதிந்திருக்கும் நேரத்தில் இது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு  தவறுதலாக பதியப்பட்ட கைபேசி எண்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியாய விலைக்கடைகளின் மீது பல்வேறு புகார்கள் குவிந்துவரும் நிலையில்,  குறுஞ்செய்தி தொடர்பான பிரச்சனை மக்களை சந்தேகமடையச் செய்துள்ளது. இந்த பிரச்சனையில் மாவட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக தலையிட்டு, கையாடல் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசு வழங்கும் மானிய பொருட்கள் முறையாக மக்களை சென்றடைய  வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோவை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...