பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பவானியை காப்போம் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் மின்சாரத்திற்காக கூமபாளையம், சமயபுரம் ஆகிய இடங்களில் கதவணை கட்டப்பட்டு இருப்பதை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் கலப்பதால் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது எனவும், கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, கேரளாவில் தேக்குவட்டை உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்படுவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றிலும் தடைபட்டு போகும் எனவும், எனவே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...