கே.எம்.சி.எச்-ல் அதிநவீன ரோபோட்டிக் கருவி மூலம் பத்துவகையான அறுவை சிகிச்சை

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக ரோபோட்டிக் கருவியின் உதவியுடன் சிக்கலான இரைப்பை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிநவீன டாவின்சி ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி செய்யும் அறுவை சிகிச்சை மிகசிறு துளையிட்டு, வலி குறைவாகவும், தழும்பு இல்லாமலும், நோயாளிகள் விரைவில் குணமடையும் விதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. பெரிதாக்கப்பட்ட முப்பரிமாண காட்சியால், சிக்கலான புற்றுநோய்த் திசுக்களையும் மிகவும் துல்லியமாக பிற நற்திசுக்கள் பாதிக்காத வகையில் அகற்ற முடியும். 



54 வயது பெண்மணி உணவு உண்ண முடியாத நிலையில் மருத்துவர் கணேசனை வந்து சந்தித்தார். அவரை ஆய்வு செய்த மருத்துவர், மார்பு பகுதியில் உள்ள  உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார். அவருக்கு புற்றுநோய் கட்டியை கரைக்க கீமோ கதிர்வீச்சு சிகிச்சை தரப்பட்டது. இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. எனவே இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு டாக்டர் கணேசன் ரோபோட்டிக் கருவியின் மூலம் உணவுக் குழாய்பகுதி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் மற்றும் இரண்டு கோளவடிநீர் கட்டிகளையும் அகற்றினார். 

வழக்கமாக இந்தமுறையில் மார்பை திறந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதை தவிர்த்து, அதிநவீன ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி மார்பு பகுதியில் நான்கு சிறியதுளையிட்டு துல்லியமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டார். இது போன்றே 3 மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை இந்த ரோபோடிக் கருவியின் உதவியுடன் மிகவும் துல்லியமாக மேற்கொண்டுள்ளார். இதனால், நிரந்தரமான மலக்குடல் நீக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

டாவின்சி ரோபோட்டிக் அமைப்பை பயன்படுத்தி இவர் கே.எம்.சி.எச்-ல் இதுவரை 15 அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். ரோபோட்டிக் கருவியைபயன்படுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பத்துவகையானஅறுவை சிகிச்சை விபரங்கள்:

1) மார்பு பகுதி அறுவை சிகிச்சை

2) இரைப்பை 

3) ஹெல்லர்ஸ் எதுக்களிப்பு

4) டி2 இரைப்பை பகுதி

5) கணையத்தில் ஏற்படும் அழற்சி

6) மலக்குடல் புற்றுநோய்

7) ஆசனவாய் சிகிச்சைகள்

8) மலக்குடல் நீக்கத்தை தவிர்த்து புற்றுநோய் அறுவை சிகிச்சை

9) கருப்பைநீக்க அறுவை சிகிச்சை

10) உடல் பருமனை கட்டுப்படுத்தும் இரைப்பை அறுவை சிகிச்சை

கே.எம்.சி.எச் ரேபோட்டிக்  அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவில், டாக்டர் கணேசன் பொது அறுவை சிகிச்சை மருத்துவர், சிறுநீரகம் மற்றும் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் குப்புராஜன், மற்றும் டாக்டர் ஆனந்தன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கே.எம்.சி.எச் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், “ரோபோட்டிக் சிஸ்டத்தை பயன்படுத்தி டாக்டர் கணேசன் மேற்கொண்ட அறுவை சிகிச்சை, கோவையில் முதல் முறையானது. டாக்டர் கணேசனின் இந்த அருமையான துல்லியமான சிகிச்சை பாராட்டுக்குரியது. கேஎம்சிஎச் -ல், மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் கிடையாது என்பது, மக்களிடையே நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களில் கேஎம்சிஎச்-ல் ரோபோடிக் மருத்துவ குழுவின் உதவியால் 35 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...