மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் ஜனவரி 31ல் கருப்பு தினமாக அனுசரிப்பு- எஸ்.டி.பி.ஐ


ஜல்லிக்கட்டிற்கு போராட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை ஏற்கத்தக்கது அல்ல எனவும், பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை  திரும்ப பெற வேண்டுமெனவும் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பகாவி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பாகவி, ஐல்லிக்கட்டுமீதான தடையை நீக்க தமிழக அரசு அவசர சட்டத்தை முன்கூட்டியே ஏன் கொண்டு வரவில்லை என கேள்வி எழுப்பினார். சென்னையில் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் தந்த நடுக்குப்பம், லுர்துகுப்பம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கலவரத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்கள், மாணவர்கள் மீதான கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டுமெனவும், அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். 

ஐல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படத்துடன் போராட்டக்காரர்கள் வந்தார்கள் என போராட்டத்தை கொச்சைப்படுத்தி, திசை திருப்ப தமிழக முதல்வர் முயற்சிப்பதாகவும், 6 மாதங்களுக்கு முன்னர் இந்திய தேசிய லீக் கட்சி போராட்டத்தில் எடுக்கப்பட்ட பின்லேடன் படத்தை ஜல்லிக்கட்டில் எடுக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் முதல்வர் தவறான தகவல் அளித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை ஏற்கத்தக்கது அல்ல எனவும், பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியது மத்திய அரசின் லட்சணத்தை வெளிப்படுத்துகிறது எனவும், கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் சில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் தான் பிரச்சணைக்கு காரணம் என குறிப்பிட்டது. ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமெனவும், அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த மத்திய அரசை கண்டித்து ஜனவரி 31ம் தேதியை எஸ்.டி.பி.ஐ கருப்பு தினமாக அனுசரிப்பதுடன் நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...