கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனுக்களாக வழங்கினர். இதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துபோய் உள்ளதால் மாவட்டம் முழுவதிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதற்காக மத்திய மற்றும் மாநில அளவில் உயர் கண்கெடுப்புகுழு பார்வையிட்டு சென்றுள்ளது. அனைவருக்குமான நிவாரணத்தொகை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சராசரி மழை அளவாக  623.1 மி.மீ உள்ளது. டிசம்பர் 2016 மாதம் வரை 306.22 எம்.எம் வரப்பெற்றுள்ளது. இதில் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வட்டாரங்களில் அதிக மழை பொழிவு பெறப்பட்டுள்ளது. 

அணைகளின் நீர் மட்டம் சோலையார் அணையில் 3.38 அடியும், ஆழியார் அணையில் 57.20 அடியும், பரம்பிக்குளம் அணையில் 11.28 அடியும் நீர் இருப்பு உள்ளது. 

பயிர் சாகுபடி பரப்பு டிசம்பர் இதுவரை 70492 ஹெக்டேரில் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் பரப்பளவு 26041 ஹெக்டர் ஆகும். இதில் சோளம் 20879 ஹெக்டேர், மக்காச்சோளம் 3870 ஹெக்டேர், பயிறு வகைகள் 6761 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 4177 ஹெக்டேர், மிளகாய், கத்தரி, வெங்காயம், தக்காளி ஆகிய காய்கறி பயிர்கள் 11135 ஹெக்டேர் அடங்கும்.

விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய விதை இருப்பு நிலவரமானது நிலக்கடலை 4.080 மெ.ட, பாசிப்பயறு, துவரை, உளுந்து ஆகியவை 4.2010 டன்னும், மக்காச்சோளம், குதிரைவாலி, திணை உள்ளிட்டவை 0.4100 டன்னும் அரசு மற்றும் தனியார் விதை கிடங்குகளில் இருப்பு உள்ளது. இவற்றினை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

மாவட்டத்தில் உரம் இருப்பு 8562 மெட்ரிக் டன் உள்ளது. யூரியா 2920 மெட்ரிக் டன், டிஏபி 1813 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2207  டன்னும் உள்ளது.

விவசாயிகளுக்கு இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி மூலம் 4699.88 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் து.வெங்கடேசன், வேளாண் இணை இயக்குநர் சந்திரசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்ராஜ்சாமுவேல், வருவாய் கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...