தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டாட்டம்



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 68-வது குடியரசு தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கு.இராமசாமி, தேசியக் கொடியினை ஏற்றிவைத்து குடியரசு தின விழா உரையாற்றினார்.



அப்போது அவர் தனது உரையில், நாட்டினை ஒன்றிணைத்து இந்தியாவை உலகின் மிகப்பெரிய குடியரசாக்கிய இந்தியத் தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களால் நாம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அனைவருக்கும் உணவு அளிக்கும் நிலையடைந்தோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பினை சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் உலக அளவில் பட்டியலிடப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இருப்பது நமக்கு பெருமை சேர்ப்பதாகும் குறிப்பிட்டார். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட பல்வேறு விருதுகள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் கடுமையான உழைப்பபின் வெகுமதி என நினைவு கூர்ந்தார்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்காக நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்களோடு தேசிய மாணவர் அதிகாரிகள் செல்லமுத்து மற்றும் மனோன்மணி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அலுவலர்கள், பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் ஆரம்பப் பள்ளி சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...