கடும் எதிர்ப்பால் கோவையில் பீட்டாவின் துணையான ஹெச்ஏஎஸ்-யின் சித்ரா இசை நிகழ்ச்சி ரத்து


கோவையில் பீட்டாவின் துணை அமைப்பான ஹுயுமன் அனிமல் சொசைட்டி (ஹெச்ஏஎஸ்) சார்பில் நடைபெறவிருந்த பிரபல பாடகி சித்ரா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி மக்களின் கடும் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழக மக்களுமே பீட்டாவுக்கு எதிராக கொந்தளித்தாலும் அதன் துணை அமைப்புகள் வெளிநாட்டு நிதியின் ஊக்கத்தால் அடங்க மறுத்து வருகின்றனர். தற்போது, மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற பீட்டாவின் மற்றொரு துணையான ஹியூமன் அனிமல் சொசைட்டி கோவையில் வரும் 29-ந் தேதியன்று பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை தமிழ் மண்ணில் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தது அந்த அமைப்பு. இந்த நிகழ்ச்சிக்கு பாடகி சித்ராவும் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அப்பணத்தைக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு தொடர்வதற்கும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தகவல் வெளியிட்டனர்.

தமிழர்களிடம் இருந்து கட்டணமாக பணத்தைப்பெற்று அதில் தமிழக மக்களின் பாரம்பரிய அடையாளத்தையே அழிக்கும் இந்நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அலறிப் போன பீட்டாவின் குட்டி ஹுயுமன் அனிமல் சொசைட்டி தற்போது பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...