கோவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு புகழாரம்!


கோவை சிவானந்தா காலனியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்தார். பின்னர் பேசிய அவர் கடந்த ஒரு வாரகாலமாக தமிழ்மொழியின் கலாச்சாரம், பண்பாட்டை காக்க ஜல்லிகட்டை முன்வைத்து மிகப்பெரிய போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வெற்றி கண்டிருக்கின்றனர் எனவும் போராட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.



தமிழகம் முழுவதும் போராட்டத்தில் கலந்து கொண்ட கர்பிணிகள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் காவல் துறையால் தாக்கப்பட்டனர் எனவும் கோரிக்கை வெற்றி பெற்ற நிலையில் மாணவர் போராட்டத்தில் தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் அறவழி போராட்டத்திற்கு முதல்வர் பன்னீர் செல்வம் பாரட்டு தெரிவித்த பின்னரே மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது எனவும் வாகனங்களுக்கும், குடிசைகளுக்கும் போலிசாரே தீ வைக்கும் வாட்ஸ் அப் காட்சிகளை பார்த்த தமிழக ஆளுநர் அதிர்ச்சி அடைந்தார் எனவும் தெரிவித்த அவர், மாணவர் மீதான தாக்குதலில் போலிசார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழ் மொழி காப்பாற்றப்பட்டது எனவும் 2017 தமிழ் இளைஞர்களால் தமிழ் பண்பாடு காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.



மாணவர் போராட்டத்தை தொடந்து உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்த அதிமுக அரசு, இதை ஏன் கடந்த மூன்றாண்டுகளாக செய்யாமல் இருந்தது எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் மாணவர்கள் போராடும் நிலை நிச்சயமாக வந்திருக்காது எனவும் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியால் எந்த காலத்திலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது என்பதால் திமுகவை விமர்சனம் செய்கின்றது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை அருகே சிறுவாணி, பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு துணையாக மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் அமைந்துள்ளது எனவும் ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் சீரழிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவையில் கடந்த 2014ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது தமிழ் மொழி மத்திய ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படிருந்தது எனவும்  கலைஞர் காலத்திலேயே தமிழ் மொழி மத்திய ஆட்சி மொழியாக வர வாய்ப்பிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஜல்லிகட்டு போராட்டம் நினைவாக  காளையின் சின்னத்தை மெரினாவில் வைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், இளைஞர்களும் தன்னிடம் வலியுறுத்தியதாகவும், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அரசிடம் வலியுறுத்த போவதாகவும், நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், விரைவில் திமுக ஆட்சி அமையும் போது ஜல்லிகட்டு போராட்டம் நினைவுவாக காளை சின்னம் மெரினாவில் அமைக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...