ஏசிசி வித்யாசாரதி கல்வி உதவித் தொகை திட்டத்தினை கோவை மாநகராட்சி ஆணையர் இன்று துவக்கி வைத்தார்


வித்யாசாரதி தனது ஆலைமட்ட முயற்சியாக ஏசிசி மதுக்கரை சிமெண்ட் ஆலையானது "ஏசிசி வித்யாசாரதி கல்வி உதவித்தொகைத் திட்டம்" என்னும் திட்டத்தினை துவங்கியது.



ஏசிசி மதுக்கரை சிமெண்ட் ஆலை இயக்குநர் கே.வம்சிதர் ரெட்டி, டி.என்.கோபகுமார், முதன்மை மேலாளர் வினித் ஏ.நாயர் மற்றும் இணை மேலாளர் எம்எஸ்டிஎல் ஆகியோர் முன்னிலையில் கோவையில் நடைபெற்ற இதன் துவக்கி நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்தத் தொழில்நுட்ப கல்வி உதவியானது கோவை மாநகராட்சியின் சமூக முயற்சியினை ஒத்து இ-கெவர்னன்ஸ் இன்ஃப்ரராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் எஜுதர்மா அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.



இதுகுறித்து துவக்க விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், இருபது லட்ச ரூபாய் அளவிலான இந்த கல்வி உபகராத் தொகையானது கோவையின் பல்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த நூறு மாணவர்களுக்கு நேரடியாக பலனளிக்கும்.

நிறுவன மற்றும் கல்வித் துறைகளின் கல்விசார் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே இந்த உதவித் தொகையின் இந்த உதவித்தொகையின் உத்தேசம் ஆகும். கல்வி உதவித் தொகை படிவங்களை சமர்ப்பித்தல், சரிபார்த்தல், நிதி விநியோகம் மற்றும் உதவித்தொகையினை புதுப்பித்தல் போன்ற அனைத்தும் கணினி வாயிலாக செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கான இந்த உதவித்தொகையால் அவர்களது வாழ்வாதாரமும், கல்வித் தரமும் மேம்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய கே.வம்சிதர் ரெட்டி கூறுகையில், ஏசிசி மதுக்கரை சிமெண்ட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சிஎஸ்ஆர் ஊழியர்களுக்கான வாழ்வாதாரத்தை தரமாக மேம்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கான பயிற்சியையும் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. 

பல நாடுகளில் அடிப்படை தெரிதல் கூட இன்றி பலர் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். எங்களது இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு உதவித் தொகைகளும், அவர்களின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தி வருகிறோம்.

இதன் முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை 100 மாணவர்களுக்கு வழங்கப்படும். அதாவது, இளங்களை பட்டப்படிப்பு மாணவர்கள் 40 பேருக்கும், ஐடிஐ மாணவர்கள் 20, டிப்ளமோ மாணவர்கள் 30, தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் 12 பேருக்கும் வழங்கப்படவுள்ளது என்றார்.

இதற்கான விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனமானது முதலில் தன்னை இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவிற்குப் பிறகு வித்யாசாரதி குழு உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று மாணவர்கள் மத்தியில் இந்த உதவித் தொகையினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி கணினி வாயிலாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க உதவுவர்.

இதற்கான விண்ணப்பங்களை கணினி வாயிலாக 2017 ஜுன் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின் மாணவர்களுக்கான உதவித் தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...