தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி



தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியும் சென்றனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி பந்தய சாலை வழியாக தாமஸ் பூங்கா வரை சென்றது.

முன்னதாக, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் து.வெங்கடேசன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...