கோவை வஉசி மைதானத்தில் போராட்டக்காரர்களுக்கு வசதியாக துப்புரவு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் எவ்வித அரசியல் கட்சிகளின் ஈடுபாடுமின்றி தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தினர் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீங்க வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இரவு பகலாக வலியுறுத்தி வருகின்றனர்.



இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கான உணவுகள், தண்ணீர்கள் உள்ளிட்டவை பல அமைப்பினரால் நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதியில் ஏற்படும் குப்பைகளை அகற்றவும், போராட்டத்தில் பெண்களும் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திடும் வகையிலும் கோவை மாநகராட்சியின் சார்பில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று வஉசி மைதானத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது க.விஜயகார்த்திகேயன் உடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...