கோவையில் 9-ம் தேதி பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பயனாளிகளை சேர்க்கும் முகாம்

கோவை : விவசாயிகள் பயன்பெறும் வகையிலான பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பயனாளிகளை சேர்க்கும் முகாம் 9-ம் தேதி நடக்கிறது.

கோவை : விவசாயிகள் பயன்பெறும் வகையிலான பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பயனாளிகளை சேர்க்கும் முகாம் 9-ம் தேதி நடக்கிறது.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்னும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெற தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வருடந்தோறும் 3 தவணைகளில் ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் தகுதியுடையவர்கள் ஆவர். 

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளின் குடும்பங்களை பயனாளிகளாக சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை சேர்ப்பதற்காக வரும் 9-ம் தேதி கோவை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் ஆகிய அனைத்து அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

Newsletter