கோவை மாநகராட்சியில் வரும் 25, 26-ல் சிறப்பு வரிவசூல் முகாம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

கோவை மாநகராட்சியின் 5, 6, 7, 8, 55, 56, 57, 17, 75, 38, 39, 74, 85, 88, 89, 97, 11, 15, 18, 19, 25, 28, 32, 62, 63, 80, 84, ஆகிய வார்டுகளில் வரும் மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு வரிவசூல் முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் வரும் மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சியில்‌ நடப்பு 2022-23ஆம்‌ நிதியாண்டு நிறைவடைய இன்னும்‌ சில நாட்கள்‌ மட்டுமே உள்ள நிலையில்‌, கோவை‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரிகளின் பாக்கிகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நிலுவை வரிகளை செலுத்த பொதுமக்களின்‌ வசதி கருதி மாநகராட்சியின்‌ கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில்‌ மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த நிதியாண்டின்‌ இறுதி சிறப்பு வரி வசூல்‌ முகாம்கள்‌ நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.5ல்‌ வலியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.6ல்‌ வீரியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.7 மற்றும்‌ 8ல்‌ காளப்பட்டி நேரு நகா்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌.55ல்‌ எஸ்‌.ஐ.எச்‌.எஸ்‌.காலனி மாநகராட்சி பள்ளியிலும்‌, வார்டு எண்‌.56ல்‌ சூர்யா நகர்‌ - ரயில்வே கேட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.57ல்‌ ஒண்டிபுதூர்‌ நெசவாளர்‌ காலனி பகுதியிலும்‌ நடைபெற உள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வார்டு எண்‌.17ல்‌ கவுண்டம்பாளையம் ‌- சேரன்‌ நகர் - தண்ணீர் தொட்டி அருகிலும்‌, வார்டு எண்‌.75ல்‌ சீரநாயக்கன் பாளையம்‌ - நேதாஜி வீதி பகுதியிலும்‌, மார்ச் 26அன்று வார்டு எண்‌.38ல் வடவள்ளி பொம்மனாம்பாளையம்‌ மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும் நடைபெறுகிறது.

மேலும், மார்ச் 25 அன்று வார்டு எண்‌.39ல்‌ சுண்டப்பாளையம்‌ பெருமாள்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, மற்றும்‌ 26.03.2023 அன்று வார்டு எண்‌.74ல்‌ பூசாரி பாளையம்‌ - சமுதாய கூடத்திலும்‌ நடைபெறவுள்ளது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.85-ல்‌ குறிச்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்திலும்‌, வார்டு எண்‌.88ல்‌ குனியமுத்தூர்‌ - ரைஸ்‌ மில்‌ ரோடு - மாநகராட்சி உயர்நிலை பள்ளியிலும்‌, வார்டு எண்‌.89ல்‌ சுண்டக்காமுத்தூர்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மற்றும்‌ வார்டு எண்‌.97ல்‌ பிள்ளையார்புரத்தில்‌ நடைபெற உள்ளது.

வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11ல் எம்‌.ஜி.ஆர்‌. நகா்‌ - ஜனதா நகா்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.15 சுப்ரமணியம் பாளையம்‌- வார்டு அலுவலகம்‌ அருகிலும்‌, வார்டு எண்‌ 18ல்‌ நல்லாம்பாளையம்‌ மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.19ல்‌ மணியகாரம் பாளையம் ‌- அம்மா உணவகம்‌, வார்டு எண்‌.25ல்‌ காந்தி மாநகர்‌ - அரசு மேல்‌நிலை பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்.28ல்‌ காமதேனு நகா்‌ - வார்டு அலுவலகத்திலும்‌ நடைபெற உள்ளது.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.32ல்‌ சிறுவர் பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு எண்‌.62 சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.63ல்‌ ஒலம்பஸ்‌ - 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌, வார்டு எண்‌.80ல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌.84ல்‌ ஜி.எம்‌. நகரில்‌ உள்ள தாகத்‌ இஸ்லாம்‌ பள்ளியிலும்‌ நடைபெற உள்ளது.

இந்த வார்டுகளில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநகராட்சியின்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை வழக்கம்போல்‌ செயல்படும்‌. எனவே, பொதுமக்கள்‌ இந்த சிறப்பு வரிவசூல்‌ முகாம்களில்‌, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி மாநகராட்சியின்‌ அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...