இனி, சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் - கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும்: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு!

தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்றும் அதற்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படும் என்று வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


கோவை: தமிழக சட்டசபையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பின்படி, பொது மக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள், இனி சனிக்கிழமையும் செயல்படும்.சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்.

பதிவு செய்த திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என்றும் அவசர ஆவணப்பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.அதன்படி, தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...