தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் - காவல்துறை அறிவிப்பு..!

நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தகுந்த ஆவணங்களுடன் அக்., 31ம் தேதிக்குள் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகர், நூறடி ரோடு எம்.எம்., காம்ப்ளக்ஸில் தோட்டத்தில் சிட்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதேபோன்று ரேஸ்கோர்ஸ் ராஜநாராயண டவர்ஸ் முதல் தளத்தில், ஒரியண்டல் இன்டர் சேன்ச் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது.

இந்த நிதி நிறுவன இயக்குனர்கள் அதிக வட்டி தருவதாக விளம்பரப்படுத்தி, பொதுமக்களிடம் பணம் பெற்றனர். பல லட்சம் ரூபாய் முதலீடு பெற்ற நிதி நிறுவனங்கள், பணத்தை தராமல் மோசடி செய்தன.

இதுதொடர்பான புகார்களின்படி, குறிப்பிட்ட நிதி நிறுவன இயக்குனர்கள் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, குறிப்பிட்ட நிதி நிறுவனங்களில், பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் தகுந்த ஆவணங்களுடன் அக்டோபர் 31ம் தேதிக்குள், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை அணுகி புகார் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...