சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை -77081 00100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம்- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்.!!

கோவை: 5-கிலோ கஞ்சா 1-லட்சத்து 10-ஆயிரம் மீட்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டினார்.


கோவை: 5-கிலோ கஞ்சா 1-லட்சத்து 10-ஆயிரம் மீட்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டினார்.

கோவையில் மாவட்ட காவல்துறை சார்பாகப் போதைப் பொருள் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 5 கிலோ கஞ்சா ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல் அதிகாரிகளை இன்று மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மேற்பார்வையில், தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மண்டூஸ்குமார் என்பவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

மேற்படி மண்டூஸ்குமாரை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பண‌ம் ரூபாய் 1,10,000/- ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மேற்படி நபரை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் மண்டூஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தார்.

மேற்படி இவ்வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் உதவி ஆய்வாளர் திலக் மற்றும் தனிப்படையினரைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட அலுவலகத்தில் வைத்துப் பாராட்டிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கும் நபர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் மற்றும் தகவல் தெரிவித்த நபர் குறித்து ரகசியம் காக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...